BLOOM BOX

Energy of the future.I thought of sharing this with you friends.In this modern era of spontaneous Power cuts & Power Shutdowns, this Bloom Energy from the BLOOM BOX is a promising phenomenon.




EDUCATION :
Sridhar was awarded a bachelor's degree in mechanical engineering from the National Institute of Technology at TiruchirappalliTamil Nadu, India in 1982. He moved to the United States and gained a M.S. in nuclear engineering and a PhD in mechanical engineering from the University of Illinois at Urbana-Champaign in 1989.

CARRIER :
Sridhar was the director of the Space Technologies Laboratory at the University of Arizona where he was also professor of Aerospace and Mechanical Engineering.

Due to his profound knowledge,he joined NASA as Director in Space Technologies.He was assigned the task of finding the possibilities of Human Existence in MARS & producing Artificial Oxygen for the survival in MARS. But unfortunately, NASA scrapped off the program. However, Sridar without losing hopes continued his research. He performed back tracking method of utilizing the Artificial oxygen produced & to his surprise,  the POWER was generated when combined with Natural Gas.

HOW BLOOM BOX WORKS?

The Bloom Box consists of green colored disk (cell) on one side & black colored disk (cell) on the other side. The feeds of Oxygen is passed through the cathode & the Natural Gas on the anode, which by chemical reactions generate electricity.The disks are separated by cheap metals rather than expensive metals like platinum. The Natural gas can be replaced by Bio Gas or Solar even....


CUSTOMERS :

This Bloom box has gathered customers in all domains. Do you know who is the first Customer of Bloom Box?.. Its none other than the World's leading Search Provider "GOOGLE". As on date, it has more than 20 Leading Companies installed their Bloom Servers which cut short their Electricity Bills. In the near future, this Bloom Box expects its way to a common man's home at a low cost of 3000$..
..

                                                            புளூம்பாக்ஸ்


கே. ர. ஸ்ரீதர் (பிறப்பு :1960 )  புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்த இவர் திருச்சி தேசிய தொழிநுட்ப கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார்; பின்னர் 1980-ல் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் தொழில்நுட்பம் பயின்று முதுகலைப்பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோரினியாவில் வசித்து வருகிறார்.இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. 
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள வின்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின் (ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரி) இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வில், குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆய்வை நிறுத்தியது.

ஆய்வு : ஸ்ரீதர் தனது ஆய்வுகளை அப்படியே பின்னோக்கி செய்து பார்த்தார் அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். இவ்வாய்வின் மூலம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கினார். 2001-ல் தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் முன்னிலையில் செய்து காட்டினார்.

உதவிகள் : ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் வர்த்தகத் திட்டத்திற்கு, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்சு என்ற நிறுவனத்தைச் சேர்ந்த "ஜான் டூயர்" மற்ரும் "கிளீனர் பெர்க்கின்சு" என்பவர்கள் உதவினார்கள்.அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஜான் டூயர் ஆரம்பத்தில் முதலீடு செய்துள்ளார். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகையென்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர்மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் கேடு வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் நினைத்தார்.தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த கருவியிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்பது இராது. எனவே 2002-ல் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பிற்காக அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயார் செய்துள்ளார்.

புளூம் பாக்ஸ் : "புளூம்பாக்ஸ் " என்பது சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டி ஆகும். இதனுள் ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் நமக்குத் தேவையான மின்சாரம் தயார் செய்யலாம். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக சாண எரி வாயு அல்லது சூரிய ஒளியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியை கட்டடத்தின் உள்ளே அல்லது வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.

தேவை : உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதனால் ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே கருவி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

பயன்பாடு: இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் பயன்படுகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் கருவியை வாங்கி உள்ளது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

விலை:100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை தற்போது 7 முதல் 8 லட்சம் டாலராகும். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும் எனவும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு இதன் விலை இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

Comments

Popular Posts