THE HEALTH BENEFITS OF SPINACH SECRATES OF TAMILNADU


Spinach has more health wonders that are absent in fruits and vegetable. Most of the people are not aware of the names of different varieties of spinach. Names of common varieties of spinach are mentioned in different languages like English, botanical names, Tamil and other languages. The health benefits of most popular medicinal varieties of spinach are elaborate in this blog. In this blog some of the medicinal plants are describes but it cure normal diseases in our body that happen in our daily life.

ALTERNANTHERA SESSILIS :
Alternanthera sessilis is an aquatic plant known by several common names, including sessile joyweed and dwarf copperleaf. It is used as an aquarium plant. The leaves are used as a vegetable. Young shoots and leaves are eaten as a vegetable in Southeast Asia. Occasionally it is cultivated for food or for use in herbal medicines.  Other Indian names of this plant are Koypa (Marathi), Honganne (Kannada), Ponnaganti koora (Telugu),Ponnanganni Keerai(பொன்னாங்கண்ணி கீரை)(Tamil). Leaves along with the flowers and tender stems are used as vegetable in Karnataka , Andhra Pradesh & Tamilnadu. It is diuretic, tonic and cooling. Juice of this plant, deemed beneficial to eyes, is an ingredient in the making of medicinal hair oils and Kajal (kohl).

பொன்னாங்கண்ணி:
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல்
ALTERNANTHERA SESSILIS
பொன்னாங்கண்ணி
பெயர்:Alternanthera sessilis) 
ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு
இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது.கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில்நீர்வடிதல்,பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்,வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்,கரிசலாங்கண்ணி போலவே பொன்னாங்கண்ணிச் சாற்றையும் தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.


INDRAVALLI:
Mudakathan Keerai Botanical Name: Cardiospermum halicababum mudakathan Keerai English Name: Indravalli, and belongs to the soapberry family.  it is derived from Sanskrit Name.Mudakathan keerai is a type of Mooligai which is used in Tamil maruthuvam and siddha vaithiyam.mudakathan powder is prepared and it is given to patients those who have joint pain problem. The benefits of mudakathan keerai are more and we can add this in our daily diat. The plant cannot stay erect it need support from other plant to grow up. 

Mudakathan Keerai Uses and Recipe PreprationMudakathan Keerai kashayam for Joint Pain: take a hand full of Mudakathan leaves, wash it three or four times. Add 2 cups of water, 1tsp cumin seeds and a pinch of asafetida. Let it to boil for some time. if the water reduces half of the amount remove from heat and add a pinch of pepper powder. Drink warm on every morning (freshly Prepared). This is the best mooligai treatment for joint pain. 


முடக்கத்தான் கீரை :
INDRAVALLI
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரியகீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.


குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.




SOLANUM TRILOBATUM: 
Solanum trilobatum also called as thoodhuvalai INTamil  is an herb used to treat the common cold, cough and asthma,heart problems,ear problem by droping leaf water into ear by 1 to 2 drop ear pain will remove,. The herb can be consumed by mildly frying it in oil/ghee and then grinding it.
The plant is full of thorns, even the leaves have thorns, it is important to remove these thorns before cooking as the thorns are considered to be mildly toxic. The herb can be stored in powdered form, by drying the leaves under shade and making a powder out of it.
In India, Thailand it is used as a form of traditional medicine.

தூதுவளை:
தூதுவளை (Solanum trilobatum) மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை
தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae
பயன்படும் உறுப்புகள்: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.
SOLANUM TRILOBATUMதூதுவளை
வளரும் தன்மை: தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஈழை நோய்க்கு (ஆஸ்துமா) இது மருந்தாகப்பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
பயன்கள்: இதன் பயனை வள்ளலார் கூறும்போதுஅறிவை விளக்குவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை எரிப்பதற்கும் யோக்யதையுடைய ஒளஷதி தூதுவேளை தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக நெடு நாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்திருந்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் அவர்கள் வெளியிடமாட்டார்கள்”.
இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.
தூதுவளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.
இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.
காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.
ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.
நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
தூதவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.
தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.
தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.
தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

BLACK NIGHT SHADE:

Manathakkali keerai/Black night shade is a wonderful green variety which has lots of health benefits.It is also 
called as wonder berry.It is called as Kamanchi chettu in Telugu,Makoi in Hindi,Manathakkali in Malayalam,
Kakkesoppu in Kannada and Black night shade in English.We usually use sun dried berries in vathakuzhambu.
But we make this thanni saaru with manathakkali keerai or agathi keerai whenever we get mouth ulcers,
stomach inflammation & pains, throat pain,urine problem, pimples,hungry problems, Ascites Disease, Mosaic, 
swelling , blisters,body pain remove while apply this leaf .It’s a very good home remedy for it andyou can feel 
it in a day.The combination of manathakkali,small onions and coconut milk give a great relief from mouth 
ulcers.

மணத்தக்காளி:
மணத்தக்காளி சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். து மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. 
              BLACK NIGHT SHADE              
                 மணத்தக்காளி                     


நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின்சியும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. 


மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். 


அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. 


இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும் 


கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். 


இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது



DRUMSTICK:


Moringa oleifera is the most widely cultivated species of the genus Moringa, which is the only genus in the family Moringaceae. English common names include: moringa,drumstick tree Murungai Keerai ,
DRUMSTICK
முருங்கை
Drumstick leaves are very effective in reducing the blood sugar level in the blood and thus diabetes patients are advised to consume drumstick leaves in regular diet, at least three times in a week. Anti-inflammatory properties of Murungai Keerai , drumstick leaves can be helpful in decreasing the swelling of hands or legs.Murungai Keerai  consitipation remedy , If you are suffering from constipation then drumstick leaves can be useful to get relief. Murungai Keerai for hair, the common hair problems like hair fall, greying of hair and dandruff can be effectively solved with the help of drumstick leaves.Drumstick leaves reduce the body heat and also deal positively with heat related problems like redness of eyes and headache. Murungai Keerai leaves juice help to lessen body temperature.Drumstick leaves give the benefit of blood purifier as well. It improves the blood circulation in the body. Fry some drumstick leaves in pure ghee and consume without adding any spices in it.The patients of asthma can be treated with the help of drumstick leaves soup.These leaves are very helpful for new mothers as it improves milk secretion in mothers and it is also beneficial for pregnant ladies as it gives strength to the bones and helps for baby growth.Mix drumstick leaves juice along with lemon juice and apply it on the face to get rid of pimples and acne. Wash it after 10 minutes with cold water.To get soothing effect in headache rub drumstick leaves against the temples for few minutes.Any fungal or bacterial skin infection can be cured with the help of fresh drumstick leaves.Murungai Keerai leaves are rich source of iron and thus used in the treatment of anemia.


முருங்கை :
முருங்கை மரத்தில்இருந்து  பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக்
DRUMSTICKமுருங்கை
கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலைஅடிவாரம் .
தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200
முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.




"Noyattrre vazhve kurai vattrra selvam"means in english "health is wealth" is a Tamil proverb health is a good wealth to human beings. Without health we cannot live happy.


Comments

  1. Very useful. Please describe the utility of medicinal plants and give the pronounciation in all Dravidian languages.

    ReplyDelete
  2. Thankyou for all your efforts that you have put in this. very interesting info . cultured ghee benefits

    ReplyDelete

Post a Comment

Popular Posts