Shiva Ayyadurai
![]() பிறப்பு |
2 திசம்பர் 1963 (அகவை 49) |
||||||
---|---|---|---|---|---|---|---|
வாழிடம் | அமெரிக்கா |
||||||
குடியுரிமை | அமெரிக்கர் |
||||||
தேசியம் | இந்திய பூர்வீகம் உடைய அமெரிக்கர் | ||||||
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம | ||||||

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, மும்பை, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.
இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன.ஐயாதுரை திசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் படங்களுக்கு இயக்கமூட்டல் (அசைபடமாக்கல் animation) துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றார்
- 2007 ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் ([biological engineering) துறையில் எம். ஐ. டி யில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார்.from MIT on computing with molecular pathway models.
Comments
Post a Comment